16th May 2025 10:51:18 Hours
விஷேட படையணி சேவை வனிதையர் பிரிவினரால் 2025 மே 13 அன்று படையணி தலைமையகத்திற்கு முன்னால், உபகரண பணிப்பாளர் நாயகமும் விஷேட படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் எம்டிஐ மகாலேகம் டபிள்யூடபிள்யூவீ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், விஷேட படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஹன்சிகா மகாலேகம் அவர்களின் மேற்பார்வையின் கீழ் ரொட்டி தானம் வழங்கப்பட்டது.
இந்த தானம் நிகழ்வில் கிட்டத்தட்ட 1,600 பொதுமக்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் விஷேட படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.