09th May 2025 14:27:37 Hours
இராணுவ சேவை வனிதையர் பிரிவினால் நிர்வகிக்கப்படும் தியதலாவை 'விருகெகுலு' பாலர் பாடசாலையின் வருடாந்த இல்ல விளையாட்டு போட்டி 2025 மே 08 ஆம் திகதி பாலர் பாடசாலை வளாகத்தில் நடைபெற்றது. விஜயபாகு காலாட் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவியும், 'விருகெகுலு' பாலர் பாடசாலையின் சிரேஸ்ட பொறுப்பு உறுப்பினருமான திருமதி தமயந்தி பண்டாரநாயக்க அவர்கள் இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டார்.
மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதி மேஜர் ஜெனரல் கேஏடபிள்யூஎன்எச் பண்டாரநாயக்க யூஎஸ்பீ அவர்களுடன் வருகை தந்த பிரதம விருந்தினரை பிள்ளைகள் வளாகத்திற்கு அன்புடன் வரவேற்றனர்.
சிறுவர்கள் பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டுகள் மூலம் தங்கள் திறமைகளை உற்சாகமாக வெளிப்படுத்தினர். நிகழ்வின் முடிவில், பிரதம விருந்தினர் நிகழ்வுகளில் பங்கேற்ற பிள்ளைகளுக்கு பரிசில்களை வழங்கியதுடன், விருந்தினர் பதிவேட்டுப் புத்தகத்தில் தனது பாராட்டு குறிப்பை பதிவிட்டார்.
இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், இராணுவ சேவை வனிதையர் பிரிவின் சிரேஷ்ட உறுப்பினர்கள், சிப்பாய்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.