08th May 2025 16:10:41 Hours
மெனிங் டவுன் ‘விருகெகுலு’ பாலர் பாடசாலையில் கல்வி கற்கும் பிள்ளைகள் 2025 மே 02 அன்று மெனிங் டவுன் ‘விருகெகுலு’ பாலர் பாடசாலையில் நடைப்பெற்ற வருடாந்த இல்ல விளையாட்டு போட்டியில் கலந்துகொண்டு தங்கள் விளையாட்டுத் திறன்களையும் கலைத்திறமைகளையும் வெளிப்படுத்தினர்.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி சுவேந்திரினி திசாநாயக்க, மெனிங் டவுன் ‘விருகெகுலு’ பாலர் பாடசாலையில் பொறுப்பாளரும், இராணுவ சேவை வனிதையர் பிரிவின் செயலாளருமான திருமதி சுரங்கி அமரபால அவர்களுடன் பிரதம விருந்தினராகக் கலந்துக் கொண்டார்.
வருகை தந்த பிரதம விருந்தினரை பிள்ளைகள் தாம்பூலம் வழங்கி வரவேற்றனர்.
அனைத்து பிள்ளைகளும் பல்வேறு விளையாட்டு போட்டிகள் மற்றும் பொழுதுபோக்கு நிகழ்வுகளில் மகிழ்ச்சியுடன் பங்கேற்றனர். இதில் குழு இசை நிகழ்ச்சி, லாலிபாப் விளையாட்டு, சமநிலை விளையாட்டு, தடைதாண்டல் விளையாட்டு, வேடிக்கையான விளையாட்டு, நகரும் கப்கேக், கூம்புகளுடன் வேடிக்கை மற்றும் பல நிகழ்ச்சிகள் அடங்கியிருந்தன.
அன்றைய நிகழ்வுகள் உற்சாகத்தால் நிறைந்திருந்ததுடன், அணிநடை கண்காட்சி மற்றும் இசைக்குழு நிகழ்ச்சி வண்ணம் சேர்த்தது. அன்றைய நிகழ்வுகளில் பங்கேற்ற பிள்ளைகளுக்கு பிரதம விருந்தினர் பரிசுகளை வழங்கினார்.
சிரேஷ்ட அதிகாரிகள், இராணுவ சேவை வனிதையர் பிரிவின் சிரேஷ்ட உறுப்பினர்கள், அதிகாரிகள், பாலர் பாடசாலையின் ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் சிறுவர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.