Header Block Tamil

இராணுவ சேவை வனிதையர் பிரிவு

05th May 2025 20:28:29 Hours

பொறியியல் சேவைகள் படையணி சேவை வனிதையரால் தரம் ஐந்து புலமைப்பரிசில் சாதனையாளர்களுக்கான சிறப்பு நிகழ்ச்சி

பொறியியல் சேவைகள் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி அனுபமா ரத்நாயக்க அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் 2024 ஆம் ஆண்டு தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சிறந்து விளங்கிய பொறியியல் சேவைகள் படையணியின் பணியாளர்களின் பிள்ளைகளை பாராட்டும் விதமாக 2025 ஏப்ரல் 27 ஆம் திகதி 4 (தொ) பொறியியல் சேவைகள் படையணி சேவை வனிதையர் பிரிவினரால் ஒரு சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செயப்பட்டிருந்தது.

இந்த நிகழ்வில், மொத்தம் 180 சிறார்கள் தங்கள் கற்றலுக்கான பாடசாலை பொருட்களைப் பெற்றுக்கொண்டனர். இந்த நிகழ்வில் பொறியியல் சேவைகள் படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.