Header Block Tamil

இராணுவ சேவை வனிதையர் பிரிவு

05th May 2025 20:30:13 Hours

கொமாண்டோ படையணி சேவை வனிதையர் பிரிவால் ஆடை தொழில் முனைவோருக்கான பயிற்சி

கொமாண்டோ படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி சமிந்தி விக்ரமரத்ன அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், 2025 ஏப்ரல் 27 ம் திகதி கொமாண்டோ படையணி சேவை வனிதையர் பிரிவினரால் படையினர் மற்றும் சிவில் ஊழியர்களின் துணைவியர்களுக்கு தங்கள் சொந்த ஆடை தொடர்பான தொழிலை ஆரம்பிக்கவும் நிர்வகிக்கவும் அதிகாரம் அளிக்கும் வகையில் ஆடை தொழில்முனைவோர் பயிற்சித் திட்டத்தை கொமாண்டோ படையணி தலைமையகத்தில் முன்னெடுத்தனர்.

பெஸ்டல் எண்டர்பிரைசஸின் தலைவி திருமதி ரோஷானி திசாநாயக்க மற்றும் அவரது நிபுணர் குழுவால் பயிற்சித் திட்டம் நடத்தப்பட்டது. இந்த அமர்வில் மொத்தம் 70 துணைவியர்கள் பங்கேற்றனர்.