Header Block Tamil

இராணுவ சேவை வனிதையர் பிரிவு

05th May 2025 20:32:02 Hours

கெமுனு ஹேவா படையணி சேவை வனிதையர் உறுப்பினர்கள் கம்புருபிட்டிய அபிமன்சல II நலவிடுதிக்கு விஜயம்

கெமுனு ஹேவா படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி வைத்தியர் (திருமதி) தில்ருக்ஷி விமலரத்ன அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், கெமுனு ஹேவா படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள் கம்புருபிட்டிய அபிமன்சல II நலவிடுதியின் மாற்றுத்திறனாளி போர் வீரர்களின் நலனை விசாரிக்க 2025 மே 01 விஜயம் மேற்கொண்டனர்.

விஜயத்தின் போது, ரூ. 50,000.00 க்கு பெறுமதியான தொலைக்காட்சி மற்றும் அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய பரிசுப் பொதிகள் போர்வீரர்களுக்கு வழங்கப்பட்டன. போர் வீரர்களுக்கான தேநீர் விருந்து மற்றும் உணவு விருந்துடன் பொழுதுபோக்கு நிகழ்வுகள் நடைபெற்றது. குழு படம் எடுத்தலுடன் நநிகழ்வுகள் நிறைவுற்றன.

காலாட் படை பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகமும் கெமுனு ஹேவா படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் டபிள்யூபிஜகே விமலரத்ன ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்த விஜயத்தில் பங்கேற்றனர்.