27th April 2025 08:00:50 Hours
இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், இராணுவ சேவை வனிதையர் பிரிவு, அதன் தலைவி திருமதி சுவேந்திரினி திசாநாயக்க அவர்களின் மேற்பார்வையில், 2025 ஏப்ரல் 18 ஆம் திகதி பக்தர்களுக்கு தேநீர் வழங்கும் திட்டத்தை நடாத்தியது. இந்த முயற்சி புனித தந்த தாது கண்காட்சி முடியும் வரை தொடரும்.
பொன்டெரா பிரேண்ட்ஸ் லங்கா (தனியார்) நிறுவனத்துடன் இணைந்து, புனித தந்த தாது நினைவுச் சின்னத்தை வழிபடுவதற்காக தினமும் வருகை தரும் பக்தர்களுக்கு இராணுவ சேவை வனிதையர் பிரிவு 50,000 தேநீர் பானங்களை விநியோகிக்கிறது.
11 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் கேஏயூ கொடித்துவக்கு ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ ஐஜீ அவரது துணைவியார், அதிகாரிகள் மற்றும் சிப்ப்பய்கள் தொடக்க நிகழ்வில் கலந்து கொண்டனர்.