17th April 2025 11:37:49 Hours
கொமாண்டோ படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி சமிந்தி விக்ரமரத்ன அவர்களின் வழிகாட்டலின் கீழ், உலக மகளிர் தினத்தை முன்னிட்டு, கொமாண்டோ படையணி தலைமையத்தில் 2025 மார்ச் 31, அன்று பெண்களுக்கான அதிகாரமளிப்பு திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பேராசிரியர் ஹேமமாலி குணதிலக்க தன்னம்பிக்கை, தலைமைத்துவம் மற்றும் உணர்ச்சி நுண்ணறிவு தொடர்பான விரிவுரையை நிகழ்த்தி, தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார். மேலும் பங்கேற்பாளர்கள் தங்கள் பல்வேறு தனிப்பட்ட, தொழில்முறை மற்றும் சமூகப் பொறுப்புக்களை நம்பிக்கையுடன் மேற்கொள்ள ஊக்கப்படுத்தினார்.
கொமாண்டோ படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள், படையினரின் துணைவியர்கள் மற்றும் சிவில் ஊழியர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.