Header Block Tamil

இராணுவ சேவை வனிதையர் பிரிவு

17th April 2025 11:28:40 Hours

ராகம ரணவிரு செவன நல விடுதிக்கு இராணுவ சேவை வனிதையர் பிரிவு விஜயம்

இராணுவ சேவை வனிதையர் பிரிவின் 2025 ஆம் ஆண்டின் வருடாந்த திட்டத்தின் ஒரு அங்கமாக, கஜபா படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி பிரியங்கா விக்ரமசிங்க மற்றும் இராணுவ பதவி நிலை பிரதானியும் கஜபா படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் எம்ஜீடபிள்யூடபிள்யூடபிள்யூஎம்சீபி விக்ரமசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ ஆகியோர் ராகம ரணவிரு செவன நல விடுதிக்கு விஜயம் மேற்கொண்டனர்.

இவ்விஜயத்தின் போது, நல விடுதியிலுள்ள போர் வீரர்களுக்கு சிற்றுண்டி மற்றும் தேநீர் வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

மேலும், அத்தியாவசிய சுகாதாரப் பொருட்கள் அடங்கிய பரிசுப் பொதிகளும் அவர்களின் தனிப்பட்ட பயன்பாட்டிற்காக விநியோகிக்கப்பட்டன.

ரணவிரு செவன நல விடுதியின் நிருவாக மற்றும் மறுவாழ்வு செயல்பாடுகளுக்கு பயன்படுத்துவதற்காக ஒரு கணினியும் பரிசாக வழங்கப்பட்டது.