Header Block Tamil

இராணுவ சேவை வனிதையர் பிரிவு

16th April 2025 23:43:03 Hours

விஷேட படையணி சேவை வனிதையரால் நன்கொடை நிகழ்ச்சி ஏற்பாடு

விஷேட படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவியின் வழிகாட்டுதலின் பேரில், விஷேட படையணி சேவை வனிதையர் பிரிவு 2025 ஏப்ரல் 12 ஆம் திகதி நாவுல கொஹோலன்வெல இராணுவ முகாமில் உள்ள 1 வது விஷேட படையணி கேட்போர் கூடத்தில் நன்கொடை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது.

இந்த நிகழ்வின் போது, கர்ப்பிணித் தாய்மார்களுக்கு சத்துணவுப் பொதிகள் விநியோகிக்கப்பட்டன.

மத அனுஷ்டானங்களைத் தொடர்ந்து, வீரமரணமடைந்த போர் வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

திம்புல்கமுவ கர்ப்பிணி சமூக மருத்துவ நிலையத்தின் கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் 1 வது விஷேட படையணியைச் சேர்ந்த வீரர்களின் கர்ப்பிணித் துணைவயர்கள் இந்த நிகழ்ச்சியின் மூலம் பயனடைந்தனர்.