16th April 2025 23:39:45 Hours
சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டைக் கொண்டாடும் வகையில், இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி சேவை வனிதையர் பிரிவு 2025 ஏப்ரல் 5 மற்றும் 6 ஆகிய திகதிகளில் குருநாகல் வெஹெர பொது மைதானத்தில் சேவை வனிதையர் புத்தாண்டு சந்தையை ஏற்பாடு செய்திருந்தது.
இந்த நிகழ்வு இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி சுமங்கலி பத்திரவிதானவின் வழிகாட்டுதலின் கீழ் நடைபெற்றது. இத்திட்டத்தில் அனைத்து இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி படையலகுகள் மற்றும் உள்ளூர் வர்த்தகர்களால் மளிகை பொருட்கள், எழுதுபொருட்கள் மற்றும் வீட்டுப் பொருட்களை வழங்கும் பல்வேறு வகையான கடைகள் காணப்பட்டன.
இந்த புத்தாண்டு சந்தையில் திருமதி சுமங்கலி பத்திரவிதான மற்றும் சேவை வனிதையர் பிரிவின் சிரேஷ்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
சிரேஷ்ட அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் அப்பிரதேசத்தச் சேர்ந்த பொதுமக்களும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.