Header Block Tamil

இராணுவ சேவை வனிதையர் பிரிவு

15th April 2025 14:01:24 Hours

இலங்கை சமிக்ஞை படையணி சேவை வனிதையரின் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு கொண்டாட்டம்

இலங்கை சமிக்ஞை படையணி சேவை வனிதையர் பிரிவு 2025 ஏப்ரல் 10 ஆம் திகதி பனாகொடை இராணுவ உடற் பயிற்சி பாடசாலை கேட்போர் கூடத்தில் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டைக் கொண்டாடியது.

இலங்கை சமிக்ஞை படையணியின் படைத் தளபதி அவர்களுடன், இலங்கை சமிக்ஞை படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி இணைந்து இந்நிகழ்வில் பிரதம விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் இசை நாற்காலி, வினோத உடை, பிள்ளைகளுக்கான வேடிக்கையான விளையாட்டுகள், பணிஸ் சாப்பிடுதல், யானைக்கு கண் வைத்தல், பலூன் உடைத்தல் மற்றும் பாரம்பரிய பல விளையாட்டுகள் இடம்பெற்றன.

அரிசி, பழங்கள், காய்கறிகள், ஆடைகள், இனிப்புகள் மற்றும் வீட்டுப் பொருட்களை விற்கும் கடைகள் மூலம் நியாயமான விலையில் அத்தியாவசியப் பொருட்களை வழங்குவதன் மூலம் வீரர்களை ஆதரிப்பதற்காக ஒரு சிறப்பு புத்தாண்டு கண்காட்சியும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.