13th April 2025 18:27:46 Hours
எதிர்வரும் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு இராணுவ சேவை வனிதையர் பிரிவு 2025 ஏப்ரல் 11 ஆம் திகதி இராணுவத் தலைமையகத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிவில் ஊழியர்களுக்கு 530 உலர் உணவுப் பொதிகளை விநியோகித்தது.
இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களுடன், இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி சுவேந்திரினி திசாநாயக்க இணைந்து பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு நிவாரணப் பொதிகளை வழங்கினர்.
இந்நிகழ்வில் முதன்மைப் பணிநிலை அதிகாரிகள், இராணுவ சேவை வனிதையர் பிரிவின் சிரேஷ்ட உறுப்பினர்கள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் பெறுனர்கள் கலந்து கொண்டனர்.