08th April 2025 15:41:54 Hours
தியத்தலாவ விருகெகுலு பாலர் பாடசாலை வரவிருக்கும் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டைக் கொண்டாடும் வகையில், 2025 ஏப்ரல் 07 அன்று ஆரம்ப பாடசாலை விளையாட்டு மைதானத்தில் ‘சிங்கிதி அவுருது உலெல’ நிகழ்வை ஏற்பாடு செய்தது.
இந் நிகழ்வில் பிரதம விருந்தினர்களாக மத்திய பாதுகாப்பு படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் கே.ஏ.டபிள்யூ.என்.எச் பண்டாரநாயக்க யூஎஸ்பீ மற்றும் தியத்தலாவ விருகெகுலு ஆரம்ப பாடசாலை பொறுப்பான சிரேஷ்ட உறுப்பினர் திருமதி தமயந்தி பண்டாரநாயக்க ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்வின் போது, பாலர் பாடசாலை சிறார்கள் பல்வேறு வண்ணமயமான நிகழ்ச்சிகள் மற்றும் பாரம்பரிய விளையாட்டுக்களில் கலந்துக்கொண்டனர். பிரதம விருந்தினர் மற்றும் பிற சிறப்பு விருந்தினர்கள் பரிசுகளை வழங்குவதன் மூலம் நிகழ்ச்சி வெற்றிகரமாக நிறைவடைந்தது.
இந் நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள், பாலர் பாடசாலை பணியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் பங்குபற்றினர்.