Header Block Tamil

இராணுவ சேவை வனிதையர் பிரிவு

06th April 2025 14:59:10 Hours

விரு பிரதிபா - 2025’ இசை நிகழ்ச்சி இராணுவ, சிவில் ஊழியர்கள் மற்றும் போர் வீரர்களின் குடும்பங்களை உற்சாகப்படுத்தல்

அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் 'தூய இலங்கை' திட்டத்தின் ஒரு பகுதியாக, இராணுவத் தளபதி லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ மற்றும் இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி சுவேந்திரினி திசாநாயக்க ஆகியோரின் வழிகாட்டுதல் மற்றும் மேற்பார்வையின் கீழ் போர் வீரர்கள், சிவில் ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு பரந்த அளவிலான நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இராணுவ சேவை வனிதையர் பிரிவின் நலன்புரி சேவையின் மற்றொரு மைல்கல்லைக் குறிக்கும் வகையில், போர் வீரர்கள், சிவில் ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு மன ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை மேம்படுத்தும் நோக்கில், 'விரு பிரதிபா - 2025' இசை மற்றும் கலாசார நிகழ்ச்சி 2025 மார்ச் 30 அன்று நெலும் பொக்குண திரையரங்கில் நடைபெற்றது.

நிகழ்விற்கு வருகை தந்த சிறப்பு விருந்தினர்கள் இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் எம்.ஜீ.டபிள்யூ.டபிள்யூ.டபிள்யூ.எம்.சீ.பி விக்ரமசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்களால் அன்புடன் வரவேற்கப்பட்டு, விழாவிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

விமானப் படை தளபதி ஏயர் மார்ஷல் வி.பி. எதிரிசிங்க டப்ளியூடப்ளியூவீ ஆர்டப்ளியூவீ ஆர்எஸ்பீ மற்றும் மூன்று பார்கள் யூஎஸ்பீ எப்என்டியூ (சீனா) பீஎஸ்சி கியூஎச்ஐ , விமானப் படை சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி. கிருஷாந்தி எதிரிசிங்க மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட 5,000 க்கும் மேற்பட்ட பணியாளர்கள் இந்த முயற்சிக்கு வலுவான ஆதரவு மற்றும் பாராட்டுகளை வழங்கும் முகமாக கலந்து கொண்டனர்.

புகழ்பெற்ற இலங்கை பாடகர்கள் அவர்களின் துடிப்பான நிகழ்ச்சிகளால் பார்வையாளர்களைக் கவர்ந்ததுடன் இராணுவ இசைக்குழு மற்றும் நுண்கலை பணிப்பகத்தின் இராணுவ இசைக்குழு மற்றும் நடனக் குழு ‘விரு பிரதிபா - 2025’ இன் உணர்வை தொழில்முறை மற்றும் திறமையுடன் உயிர்ப்பிக்கும் ஒரு அற்புதமான நடனத்தை வழங்கியது.