05th April 2025 13:50:43 Hours
போர்வீரர்கள் விவகார மற்றும் புனர்வாழ்வு பணிப்பகத்தின் வழிகாட்டுதலின் கீழ், இராணுவத்தால் நிர்வகிக்கப்படும் புனர்வாழ்வு நிலையங்களில் சிகிச்சை பெற்று வரும் போர்வீரர்கள் 2025 மார்ச் 24 முதல் 26 வரை யாழ் குடாநாட்டிற்கு விஜயம் செய்தனர்.
இராணுவ சேவை வனிதையர் பிரிவு தலைவி திருமதி சுவேந்திரினி திசாநாயக்க அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் பங்குபற்றியவர்களுக்கு கொழும்பு கோட்டையிலிருந்து காங்கேசன்துறை வரை ரயிலில் பயணித்து காங்கேசன்துறை புகையிரத நிலையத்தை வந்தடைந்ததும் அவர்களுக்கு சிற்றுண்டி பொதியுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.
இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ, இராணுவ சேவை வனிதையர் பிரிவு தலைவி திருமதி சுவேந்திரினி திசாநாயக்க, சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் சிரேஷ்ட இராணுவ சேவை வனிதையர் பிரிவு உறுப்பினர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
விஜயத்தின் நிறைவில் இராணுவத் தளபதியும், இராணுவ சேவை வனிதையர் பிரிவு தலைவியரும் போர் வீரர்களுக்கு பெறுமதியான நினைவுச் சின்னங்களை வழங்கி வைத்தனர்.