26th March 2025 08:15:37 Hours
இலங்கை இராணுவ வைத்திய படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி கல்யாணி விஜேரத்ன அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், இலங்கை இராணுவ வைத்திய படையணி சேவை வனிதையர் பிரிவினரால் 2025 மார்ச் 22 இராணுவ வைத்தியசாலை கேட்போர் கூடத்தில் நன்கொடை வழங்கும் திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் பல்கலைக்கழகக் கல்வியைத் தொடரும் இலங்கை இராணுவ வைத்திய படையணி பணியாளர்களின் எட்டு பிள்ளைகளுக்கு தங்கள் பட்டப்படிப்பை நிறைவுசெய்யும் வரை ஆண்டுக்கு ரூ. 50,000 புலமைபரிசில் வழங்கப்படும்.
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, வைத்தியர் ஜயன் மெண்டிஸ் "கோபத்தையும் மன அழுத்தத்தையும் கையாள்வது" என்ற தலைப்பில் ஒரு அறிவுமிக்க விரிவுரையை நிகழ்த்தினார்.
இலங்கை இராணுவ வைத்திய படையணி சேவை வனிதையர் பிரிவின் அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.