Header Block Tamil

இராணுவ சேவை வனிதையர் பிரிவு

21st March 2025 14:30:18 Hours

கெமுனு ஹேவா படையணி சேவை வனிதையரால் கர்ப்பிணி துணைவியர்களுக்கு நன்கொடை

கெமுனு ஹேவா படையணியின் 37 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, கெமுனு ஹேவா படையணி வீரர்களின் கர்ப்பிணி துனைவியர்கள் மற்றும் பல்வேறு படையணிகளில் தற்போது பணியாற்றும் கர்ப்பிணி பெண் வீராங்கனைகளுக்கு கெமுனு ஹேவா படையணி சேவை வனிதையர் பிரிவினரால் 2025 மார்ச் 19 அன்று கெமுனு ஹேவா படையணி தலைமையகத்தில் நன்கொடை வழங்கும் திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.

சேவை வனிதையர் பிரிவினரால் கர்ப்பிணி தாய்மார்களுக்கு தலா ரூ. 10,000.00 பெறுமதியான அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய பொதிகள் வழங்கப்பட்டதுடன், தேநீர் விருந்தும் வழங்கப்பட்டது.

கெமுனு ஹேவா படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி கலாநிதி (திருமதி) தில்ருக்ஷி விமலரத்ன இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.