21st March 2025 14:28:27 Hours
இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி சுவேந்திரினி திசாநாயக்க அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், 2025 மார்ச் 19ம் திகதி சேவை வனிதையர் அலுவலகத்தில் கணினிகள் நன்கொடையாக வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்த முயற்சியானது, கடமை செயல்திறனில் உள்ள தொழில்நுட்ப சவால்களை நிவர்த்தி செய்வதற்காக பிரிவின் கீழ் உள்ள துறைகள் மற்றும் நிறுவனங்களில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் படையினரின் செயல்திறனை மேம்படுத்துவது நோக்கமாகும்.
அதற்கமைய, இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைமை அலுவலகத்தின் பயன்பாட்டிற்காகவும், விருகெகுலு பாலர் பாடசாலை உட்பட கட்டளையின் கீழ் ஏனைய நிறுவனங்கள் மற்றும் துறைகளின் பயன்பாட்டிற்காகவும் 08 கணினிகள், 02 அச்சுப்பொறிகள் மற்றும் 02 ஸ்கேனர்கள் விநியோகிக்கப்பட்டன.