21st March 2025 14:24:16 Hours
நீண்டகால பாரம்பரியமாக, இலங்கை இராணுவ சேவை வனிதையர் பிரிவினர் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட வணிக நிறுவனங்கள் இலாப நோக்கமற்ற நிறுவனங்களுடன் இணைந்து, படையினர் மற்றும் அவர்களது குடும்பங்கள் மற்றும் பொதுமக்களின் நலனுக்காக பல்வேறு நலத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றன.
அதற்கமைய, இலங்கை இராணுவத்தின் நிறைவேற்று பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் கேவீஎன்பீ பிரேமரத்ன ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்களின் ஒருங்கிணைப்பின் கீழ், நலன்புரி திட்டத்தின் நன்மைகளுக்காக 7200 மெகி நூடுல்ஸ் பொதிகள் நெஸ்லே தனியார் நிறுவனத்தால் 2025 மார்ச் 19 ஆம் திகதி இந்தப் பிரிவுக்கு நன்கொடையாக வழங்கப்பட்டது.
இந்த நன்கொடைத் திட்டம் இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி சுவேந்திரினி திசாநாயக்க அவர்களின் தலைமையில் நடாத்தப்பட்டது.
நிறைவேற்று பணிப்பாளர் நாயகம் மற்றும் இராணுவ சேவை வனிதையர் பிரிவின் கேணல் (ஒருங்கிணைப்பு) உள்ளிட்ட சிரேஷ்ட அதிகாரிகள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.