Header Block Tamil

இராணுவ சேவை வனிதையர் பிரிவு

19th March 2025 16:07:51 Hours

விசேட படையணி சேவை வனிதையரால் நன்கொடை திட்டம்

விசேட படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி அனோஜா பீரிஸ் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், விசேட படையணி தலைமையகத்தில் 2025 மார்ச் 13 ம் திகதி நன்கொடை வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வில், விசேட படையணி படையினரின் வைத்திய தேவைகளுக்கு உதவுவதற்காக திரு. சேனக அறக்கட்டளையினர் அத்தியாவசிய மருத்துவ உபகரணங்களை நன்கொடையாக வழங்கினர். மேலும், தீவிர நோயில் சிரமபடும் ஒரு சிரேஸ்ட அதிகாரவாணையற்ற அதிகாரியின் மனைவிக்கு உதவுவதற்காக ஒரு நவீன கழிப்பறை அங்க தொகுதியை விசேட படையணி சேவை வனிதையர் பிரிவினர் நன்கொடையாக வழங்கினர்.

வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியும் விசேட படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் ஜேபீசீ பீரிஸ் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ அவர்கள் இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.