18th March 2025 16:57:51 Hours
இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி சுவேந்திரினி திசாநாயக்க அவர்கள் இராணுவ சேவை வனிதையர் பிரிவினால் நிர்வகிக்கப்படும் நலன்புரி கடை, 8 வது இலங்கை இராணுவ சேவை படையணியின் யோகட் திட்டம் மற்றும் தியதலாவை விரு கெகுலு பாலர் பாடசாலை ஆகியவற்றிற்கு 2025 மார்ச் 15 அன்று விஜயம் மேற்கொண்டார்.
இந்த விஜயத்தின் போது, அவர் அவற்றின் வளர்ச்சிக்கு தேவையான மேலதிக வழிகாட்டுதலை வழங்கியதுடன், அரசாங்கத்தின் "தூய இலங்கை" திட்ட நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதை வலியுறுத்தினார். மேலும், இந்த விஜயத்தின் ஒரு பகுதியாக, விரு கெகுலு பாலர் பாடசாலையின், ஒரு சிவில் ஊழியரின் பிள்ளையின் கல்வியை ஆதரிப்பதற்காக கற்றல் உபகரணங்கள் அடங்கிய பரிசுப் பொதியை நன்கொடையாக வழங்கினார்.
இராணுவ சேவை வனிதையர் பிரிவின் கேணல் ஒருங்கிணைப்பாளர், இராணுவ சேவை வனிதையர் பிரிவின் சிரேஷ்ட உறுப்பினர்கள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.