Header Block Tamil

இராணுவ சேவை வனிதையர் பிரிவு

31st January 2025 15:30:56 Hours

இலங்கை இராணுவ சேவை படையணி சேவை வனிதையர் பிரிவினால் மறைந்த அதிகாரியின் குடும்பதிற்கு புதிய வீடு

போர் கருவி பணிப்பாளர் நாயகமும் இலங்கை இராணுவ சேவைப் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் ஏகே. இராஜபக்ஷ ஆர்எஸ்பீ மற்றும் இலங்கை இராணுவ சேவை படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி சந்தி ராஜபக்ஷ ஆகியோர் இணைந்து திருகோணமலையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வீட்டின் சாவியை மறைந்த மேஜர் ஏ.பீ.எஸ்.யு. அபேசூரிய அவர்களின் துணைவியார் திருமதி. ஆஷா அபேசூரியவிடம் 2025 ஜனவரி 20 ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக ஒப்படைத்தனர்.

இலங்கை இராணுவ ரணவிரு வீட்டுவசதி நிதியத்தின் 9வது கட்டத்தின் மூலம் இந்த வீடு நிர்மாணிக்கப்பட்டதுடன், 15 வது இலங்கை இலேசாயுத காலாட் படையலகு, 3 வது பொறியியல் சேவைகள் படையணி, 8 வது மற்றும் 2 வது (தொ) இலங்கை இராணுவ சேவை படையணி ஆகியவற்றின் நிர்மாண உதவிகளுடன் நன்கொடையாளர்களின் நிதி பங்களிப்புகளுடன் கட்டுமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த முயற்சி 8 வது இலங்கை இராணுவ சேவை படையணி, 2 வது இலங்கை இராணுவ சேவை படையணி ஆகியவற்றின் கட்டளை அதிகாரிகள் மற்றும் சி-420 கூட்டுப் படைப்பிரிவின் கட்டளை அதிகாரியின் மேற்பார்வையின் கீழ் நடத்தப்பட்டது.

சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந் நிகழ்வில் பங்குபற்றினர்.