17th March 2025 14:02:51 Hours
இலங்கை பீரங்கி படையணி சேவை வனிதையர் பிரிவினரால் 2025 மார்ச் 09 அன்று பனாகொடை இலங்கை பீரங்கி படையணி சேவை வனிதையர் பிரிவு அலுவலகத்தில் வைத்திய முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது. இம்முயற்சி படையினர் மற்றும் சிவில் ஊழியர்களின் குடும்பங்களுக்கு தேவையான மருத்துவ சேவைகளை வழங்குவதை நோக்கமாக கொண்டிருந்ததுடன் அவர்களின் நலனுக்காக பிரிவின் உறுதிப்பாட்டை வலுப்படுத்துகிறது.
முகாமில் பொது மருத்துவ ஆலோசனைகள், விசேட கண் மற்றும் பல் மருத்துவம், ஈசிஜி, முழு குருதி அறிக்கை மற்றும் உடலில் உள்ள கொழுப்பு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. பனாகொடை, இராணுவ மருத்துவமனை மற்றும் நாரஹேன்பிட்ட இராணுவ மருத்துவமனையின் மருத்துவ அதிகாரிகள் மற்றும் சிவில் மருத்துவ அதிகாரிகள் சுகாதாரப் பராமரிப்பை உறுதி செய்வதற்காக தங்கள் சேவைகளை தொண்டாக வழங்கினர்.
குடும்ப உறுப்பினர்கள் மற்றும் சிவில் ஊழியர்களுக்கான மதிய உணவு மற்றும் பங்கேற்பாளர்களுக்கு அனைவருக்கும் பரிசுப் பொதிகள் வழங்கலுடன் நிகழ்வு நிறைவடைந்தது.