17th March 2025 14:06:50 Hours
கொமாண்டோ படையணி சேவை வனிதையர் பிரிவினரால் ஏற்பாடு செய்யப்பட்ட நீரிழிவு தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு, அதன் தலைவி திருமதி சமிந்தி விக்ரமரத்ன அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் 2025 பெப்ரவரி 26ம் திகதி நடைபெற்றது.
இராணுவ வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரிடையே நீரிழிவு நோய் தடுப்பு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அதன் தாக்கத்தை குறைப்பதை நோக்கமாக கொண்டு இந்நிகழ்வு இடம்பெற்றது. சுவ திவிய அறக்கட்டளையைச் சேர்ந்த வைத்தியர் சமரி பண்டிதகே மற்றும் அவரது மருத்துவக் குழுவினரால் ஆரோக்கியமான வாழ்க்கை முறையின் மாற்றங்கள் மற்றும் ஆரம்பகால கண்டறிதல் மூலம் சுகாதார மேம்பாட்டை கடைப்பிடிப்பது தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டது.