Header Block Tamil

இராணுவ சேவை வனிதையர் பிரிவு

17th March 2025 14:12:46 Hours

பொறியியல் சேவைகள் படையணி சேவை வனிதையர் முல்லேரியா தேசிய மனநல நிலையத்திற்கு விஜயம்

பொறியியல் சேவைகள் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி அனுபமா ரத்நாயக்க அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், பொறியியல் சேவைகள் படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள் 2025 மார்ச் 14ம் திகதியன்று முல்லேரியா தேசிய மனநல நிலையத்திற்கு விஜயம் மேற்கொண்டனர்.

விஜயத்தின் போது, நோயாளர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. மேலும் அத்தியாவசிய சுகாதார பொருட்கள் அடங்கிய பரிசுப் பொதிகள் அவர்களுக்கு நன்கொடையாக வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் பொறியியல் சேவைகள் படையணியின் கலிப்சோ இசைக்குழு, நோயாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அனைவரையும் மகிழ்வித்தது.