17th March 2025 14:41:59 Hours
பொறியியல் சேவைகள் படையணி சேவை வனிதையர் மற்றும் பொறியியல் சேவைகள் மத்திய பட்டறை ஆகியவற்றால் 2025 மார்ச் 13ம் திகதியன்று ஹோமாகம அடிப்படை மருத்துவமனையில் இரும்பு கட்டில்கள், தள்ளுவண்டிகள் மற்றும் சக்கர நாற்காலிகள் போன்ற அத்தியாவசிய மருத்துவமனை பொருட்களை புதுப்பிக்க ஆதரவளிக்கும் நோக்கில் சீரமைப்பு திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இந்த திட்டம் பொறியியல் சேவைகள் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி அனுபமா ரத்நாயக்கவின் வழிகாட்டுதலின் கீழ் முன்னெடுக்கப்பட்டது. மேலும் இது சமூகத்திற்கான சுகாதார வசதிகளின் தரத்தை மேம்படுத்துவதற்கான தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாகும்.