Header Block Tamil

இராணுவ சேவை வனிதையர் பிரிவு

11th March 2025 12:52:15 Hours

இராணுவ சேவை வனிதையர் பிரிவினால் கிராண்ட் மெட்லண்டில் மகளிர் தின கொண்டாட்டங்கள்

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, இராணுவ சேவை வனிதையர் பிரிவினால் 2025 மார்ச் 08 அன்று கொழும்பு, மெட்லண்ட் பிளேஸில் உள்ள கிராண்ட் மெட்லண்டில் ஒரு கொண்டாட்ட நிகழ்வினை நடாத்தியது.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி சுவேந்திரினி திசாநாயக்க அவர்கள் கலந்து கொண்டார். பாரம்பரிய மங்கள விளக்கேற்றல், இராணுவ சேவை வனிதையர் பிரிவின் பாடல் பாடுதல் மற்றும் போர் வீரர்களை நினைவுகூரும் வகையில் இரண்டு நிமிட மௌன அஞ்சலியுடன் நிகழ்வு ஆரம்பமாகியது. இராணுவ சேவை வனிதையர் பிரிவு மற்றும் படையணி சேவை வனிதையர் பிரிவுகளினால் நடத்தப்பட்ட நலன்புரித் திட்டங்களை விளக்கும் ஒரு சிறிய காணொளி விளக்கக்காட்சியும் காட்சிப்படுத்தப்பட்டது.

போஎவர் ஸ்கின் நெச்சுரல்ஸ் பிரைவேட் லிமிடெட்டின் தலைவி திருமதி சாந்தனி பண்டார அவர்கள் அழகு பராமரிப்பு பட்டறையை நடத்தியதுடன் பங்கேற்பாளர்களை பாராட்டும் விதமாக தயாரிப்புக்களின் பொதிகளும் வழங்கப்பட்டன. இராணுவ சேவை வனிதையர் பிரிவு நிகழ்விற்கு அளித்த மதிப்புமிக்க பங்களிப்பைப் பாராட்டி, திருமதி சாந்தனி பண்டார அவர்களுக்கு சிறப்பு நினைவுப் பரிசை தலைவி வழங்கினார்.

மேலும், 16 கர்ப்பிணிப் பெண் அதிகாரிகளுக்கு அத்தியாவசிய மகப்பேறு உதவி வழங்கப்பட்டது. இந்திரா புற்றுநோய் அறக்கட்டளையின் தலைவர் வைத்திய நிபுணர் லங்கா ஜெயசூர்ய திசாநாயக்க அவர்களின் விரிவுரையில் மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு மற்றும் சுய பரிசோதனைகளின் முக்கியத்துவம் குறித்து பங்கேற்பாளர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் 24 படையணிகளின் சேவை வனிதையர் பிரிவு உறுப்பினர்களின் நிகழ்ச்சிகளும், இராணுவ நடனக் குழுவின் கண்கவர் நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.

இந்த நிகழ்வில் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவியர்கள் மற்றும் இராணுவ சேவை வனிதையர் பிரிவு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.