10th March 2025 17:31:41 Hours
இலங்கை சமிக்ஞை படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஆயிஷா லியனகே அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, இலங்கை சமிக்ஞை படையணியின் பெண் சிப்பாய்க்கு 2025 மார்ச் 09ம் திகதி நன்கொடை வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
பயனாளி ஒரு விதவை தாய் என்பதுடன் இவர், ஆதரவு எவரதும் இல்லாமல் வாடகை வீட்டில் வசிக்கும் நிலையில் அனைத்து குடும்பச் செலவுகளையும் நிர்வகிக்கும் பொறுப்பு அவருக்கு மட்டுமே உள்ளது. அவரது மூன்று மகள்கள் தற்போது கட்டான மரியா ரஜினி ஆரம்ப பாடசாலையில் முதலாம் வகுப்பில் கல்வி கற்கின்றனர். அவரது பிரச்சினைகளை உணர்ந்து, இலங்கை சமிக்ஞை படையணி சேவை வனிதையர் பிரிவு தனது நிதியுதவியில் அவருக்கு தேவையான உதவியை வழங்க முன்வந்ததுள்ளது.
அந்நிகழ்வில் நீண்டகால நலன்புரி திட்டத்தின் ஒரு பகுதியாக, முகாம் வளாகத்தில் கொடிதோடை கன்றுகள் நடப்பட்டன. இத்திட்டம் விளைபொருட்களை விற்பனை செய்வதன் மூலம் எதிர்கால வருவாயை ஈட்டுவதை நோக்கமாகக் கொண்டுள்ளதடன், இதன் மூலம் கிடைக்கும் வருமானம் வீரர்களின் நலனுக்காக அர்ப்பணிக்கப்படவுள்ளது.