10th March 2025 17:35:34 Hours
இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி சுமங்கலி பத்திரவிதான அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், 2025 மார்ச் 09 ம் திகதி இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி தலைமையகத்தில் இரண்டு நன்கொடை நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.
இந்த நிகழ்வில் 2024 ஆம் ஆண்டு தரம் 5 புலமைபரிசில் பரீட்சையில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு ஊக்கதொகை வழங்கும் நிகழ்வும், இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி படையினரின் 92 கர்ப்பிணி துணைவியர்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை நன்கொடையாக வழங்கும் நிகழ்ச்சியும் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.