Header Block Tamil

இராணுவ சேவை வனிதையர் பிரிவு

05th March 2025 14:47:18 Hours

இலங்கை இராணுவ போர் கருவி படையணி சேவை வனிதையரின் மத அனுஷ்டானம் மற்றும் பாடசாலை உபகரணங்கள் நன்கொடை

இலங்கை இராணுவ போர் கருவி படையணி சேவை வனிதையர் பிரிவினால் ருவன்வெலி மஹா சேயவில், இராணுவ படையினர் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு ஆசிர்வாதம் வேண்டி, 2025 பெப்ரவரி 23 அன்று ஒரு மத அனுஷ்டானத்தை நடத்தியது. இந்த நிகழ்வு, இலங்கை இராணுவ போர் கருவி படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி இரேஷா பெர்னாண்டோ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், இலங்கை இராணுவ போர் கருவி படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் இஎம்எம் பெர்னாண்டோ எச்டிஎம்சீ எல்எஸ்சீ ஏஏடிஒ அவர்களின் மேற்பார்வையின் கீழ் நடைபெற்றது.

அதைத் தொடர்ந்து, 2 வது இலங்கை இராணுவ போர் கருவி படையணியின் சிப்பாய்களின் பிள்ளைகளுக்கு பாடசாலை உபகரணங்கள் நன்கொடை வழங்கும் திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மேலும், ஜய ஸ்ரீ மஹா போதியவில் பால் உணவு பூஜை நடைபெற்றதுடன் இதில் இலங்கை இராணுவ போர் கருவி படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.