05th March 2025 14:50:32 Hours
இலங்கை இராணுவ பொது சேவைப் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி துஷாரி அபேசிங்க அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், 2025 பெப்ரவரி 25 ஆம் திகதி படையணி தலைமையகத்தில் பாடசாலை பொருட்கள் வழங்கும் நன்கொடை நிகழ்ச்சி நடைபெற்றது.
நிதி முகாமைத்துவ பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகமும், இலங்கை இராணுவ பொது சேவைப் படையணி படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் ஏஎம்கேஜீபீஎஸ்கே அபேசிங்க அவர்கள் இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்.
இந்த நிகழ்ச்சியின் போது ரூ. 2,240,000.00 பெறுமதியான புத்தகங்கள், காலணிகள் மற்றும் பைகள் உள்ளிட்ட அத்தியாவசிய பாடசாலை பொருட்கள் படையினர் மற்றும் சிவில் ஊழியர்களின் 225 பிள்ளைகளுக்கு விநியோகிக்கப்பட்டன.
இந்த நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள், சிவில் ஊழியர்கள் மற்றும் பிள்ளைகள் பங்கேற்றனர்.