25th February 2025 11:42:46 Hours
இலங்கை இலேசாயுத காலாட் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி தர்ஷனி யஹம்பத் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், 7வது இலங்கை இலேசாயுத காலாட் படையணி படையினர் கிளிநொச்சி கர்ப்பிணித் தாய்மார்களுக்கு நன்கொடை வழங்கும் திட்டத்தை 2025 பெப்ரவரி 20 அன்று முன்னெடுத்தனர்.
இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, கர்ப்பிணித் தாய்மார்களுக்கு 50 உலர் உணவு பொதிகள் விநியோகிக்கப்பட்டன, மேலும் அத்தியாவசிய சுகாதார சேவைகளை வழங்குவதற்காக ஒரு மருத்துவ முகாமும் நடத்தப்பட்டது.
இந்த நலன்புரி திட்டத்திற்கான நிதி உதவி, 7வது இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் படையினரும் சுகாதார மருத்துவ அதிகாரி மற்றும் அப்பகுதியில் உள்ள கொடையாளர்களால் கூட்டாக வழங்கப்பட்டது.