18th February 2025 13:57:48 Hours
இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி சுவேந்திரினி திசாநாயக்க அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், தேவையுடையதாக காணப்பட்ட பனாகொடை விரு கெகுலு பாலர் பாடசாலையில் ஆங்கில மொழி வகுப்பறைகள் படையினரால் கட்டப்பட்டு, அதன் திறப்பு விழா 2025 பெப்ரவரி 17 ஆம் திகதி நடைபெற்றது.
வருகை தந்த சேவை வனிதையர் பிரிவின் தலைவியை பாலர் பாடசாலையின் சிறார்கள் அன்புடன் வரவேற்றனர். வரவேற்பைத் தொடர்ந்து, சிறார்கள் ஆங்கில மொழி வகுப்பில் அமர்த்தப்பட்டு, பின்னர் அவர்களுக்கு சிற்றுண்டிகள் வழங்கப்பட்டன. பின்னர், பாலர் பாடசாலை மற்றும் பகல்நேர பராமரிப்பு நிலையத்தை பார்வையிட்டு, அதன் வசதிகளை மேலும் மேம்படுத்துவதற்கு தேவையான வழிகாட்டுதல்களை வழங்கினார். இந்த நிகழ்வின் அடையாளமாக அதிதிகள் பதிவேட்டு புத்தகத்தில் பாராட்டுகளை பதிவிட்டார்.
பின்னர், தலைவி, பனாகொடை அழகு நிலையம் மற்றும் பனாகொடை, ரோமியல் மாவத்தையில் உள்ள ஒரு வீட்டைப் பார்வையிட்டார். இந்த வீடு, பல்வேறு நடவடிக்கைகளுக்காக தொலைதூரப் பகுதிகளிலிருந்து வருகை தரும் போர் வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கான விடுமுறை பங்களாவை நிர்மாணிப்பதற்காக சேவை வனிதையர் பிரிவிற்கு நன்கொடையாக வழங்கப்பட்டது. அவரது விஜயத்தின் போது, இந்த வசதிகளை எதிர்காலத்தில் மேம்படுத்துவதற்குத் தேவையான வழிகாட்டுதல்களையும் அவர் வழங்கினார்.
பனாகொட விரு கெகுலு பாலர் பாடசாலையின் பொறுப்பான சிரேஷ்ட உறுப்பினர் திருமதி சுரங்கி அமரபால, இராணுவ சேவை வனிதா பிரிவின் கேணல் ஒருங்கிணைப்பு, ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.