17th February 2025 16:07:39 Hours
இலங்கை இலேசாயுத காலாட் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி தர்ஷனி யஹாம்பத் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், இலங்கை இலேசாயுத காலாட் படையணி சேவை வனிதையர் பிரிவினரால் மீகொட, நடுஹேன மகாபோதி மகளிர் சிறுவர் அபிவிருத்தி நிலையத்தின் சிறார்களுக்கு அத்தியவசிய பாடசாலை உபகரணங்களை 2025 பெப்ரவரி 13, அன்று வழங்கினர்.
விநியோகத்துடன் படையணியின் கலிப்சோ இசைக்குழுவின் இசை நிகழ்ச்சியுடன் சிறார்கள் மகிழ்விக்கப்பட்டனர், அதைத் தொடர்ந்து இரவு உணவும் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பங்கேற்றனர்.