15th February 2025 12:53:34 Hours
இலங்கை கவச வாகன படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி துலாஷி மீபாகல அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், இலங்கை கவச வாகன படையணி சேவை வனிதையர் பிரிவு 2025 பெப்ரவரி 12ம் திகதி ரொக் ஹவுஸ் முகாமில் தர்ம பிரசங்கத்தை நடாத்தியது.
நுகேகொடை பிரக்ஞோதயா மகா பிரிவேனாவின் தலைமை விகாராதிபதி வண. கலாநிதி எம். சுகதசிறி தேரர், பிரசங்கத்தை நடாத்தியதுடன், வீரமரணமடைந்த போர் வீரர்கள், காயமடைந்த வீரர்கள், சேவை செய்யும் இராணுவ வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு ஆசிர்வதித்தார். தொடர்ந்து நடைபெற்ற மாதாந்த கூட்டத்திற்கு இலங்கை கவச வாகனப் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி தலைமை தாங்கினார்.
சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.