14th February 2025 18:32:55 Hours
இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி சேவை வனிதையர் பிரிவு, 4 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணியுடன் இணைந்து, சிப்பாய் கே.ஜே.டி. குமாரசிங்க அவர்களின் பகுதியளவு கட்டப்பட்ட வீட்டை வெற்றிகரமாக கட்டி முடித்து 2025 பெப்ரவரி 9 ஆம் திகதி கையளித்தது.
இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி சுமங்கலி பத்திரவிதான அவர்கள் கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதியும் இலங்கை தேசிய பாதுகாவலர் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் பீ.ஆர். பத்திரவிதான யூஎஸ்ஏடபிள்யூசீ பீஎஸ்சீ அவர்களுடன் இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்.
இந்த திட்டம், நன்கொடையாளர்களின் நிதியுதவி மற்றும் 4வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி படையினரின் மனிதவளத்தினால் சாத்தியமானது. மேலும், இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி சேவை வனிதையர் பிரிவு குடும்பத்திற்கு அத்தியாவசிய வீட்டுப் பொருட்கள் மற்றும் தளபாடங்களை வழங்கியது.
இந்த நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பங்கேற்றனர்.