14th February 2025 14:12:16 Hours
இயந்திரவியல் காலாட் படையணி சேவை வனிதையர் பிரிவின் புதிய தலைவியாக திருமதி மகேஷா ஆரியசேன அவர்கள் 2025 பெப்ரவரி 9ம் திகதி படையணி தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வின் போது கடமைகளை பொறுப்பேற்றார்.
இந்த நிகழ்வின் போது புதிய தலைவி நியமனத்தை ஏற்றுக்கொண்டதன் அடையாளமாக உத்தியோகபூர்வ ஆவணத்தில் கையெழுத்திட்டார்.
இந்த சிறப்பு நாளில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் இயந்திரவியல் காலாட் படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள் தங்கள் வாழ்த்துக்களை புதிய தலைவிக்கு தெரிவித்தனர்.