Header Block Tamil

இராணுவ சேவை வனிதையர் பிரிவு

13th February 2025 17:57:34 Hours

இலங்கை இராணுவ பொது சேவை படையணி சேவை வனிதையர் பிரிவு அத்திட்டிய மிஹிந்து செத் மெதுரவிற்கு விஜயம்

இலங்கை இராணுவ பொது சேவை படையணி சேவை வனிதையர் பிரிவு அதன் தலைவி திருமதி துஷாரி அபேசிங்க அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் 2025 பெப்ரவரி 11ம் திகதி அத்திட்டிய மிஹிந்து செத் மெதுராவிற்கு விஜயம் மேற்கொண்டது.

இந்த விஜயத்தின் போது, நல விடுதியிலுள்ள போர் வீரர்களுக்கு மகிழ்ச்சி மற்றும் ஆறுதல் அளிக்கும் வகையில் இசை நிகழச்சி நடாத்தப்பட்டது.

விஜயத்தின் போது, இலங்கை இராணுவ பொது சேவை படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி மற்றும் சிரேஷ்ட உறுப்பினர்கள் நல விடுதியிலுள்ளவர்களுக்கு பழங்கள் மற்றும் சுகாதார உதவிப் பொதிகளை மருத்துவமனைக்கு நன்கொடையாக வழங்கினர்.

இந்த நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பங்கேற்றனர்.