12th February 2025 21:59:40 Hours
இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி சுவேந்திரினி திசாநாயக்க அவர்கள் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களுடன் இணைந்து 2025 பெப்ரவரி 06 அன்று பாங்கொல்ல சேவை வனிதையரின் காகித மறுசுழற்சி திட்டத்தை பார்வையிட்டார்.
இந்த விஜயத்தின் போது, அவர்கள் மேற்கொள்ளப்பட்டு வரும் காகித மறுசுழற்சி திட்டம் மற்றும் உற்பத்தி செயல்முறை ஆகியவற்றை பார்வையிட்டனர். மேலும் தற்போதைய நடைமுறைகளை விரிவாக மதிப்பாய்வு செய்தனர். திட்டத்தின் நீண்டகால வெற்றிக்கு புதுமை மற்றும் விளைதிறன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, செயல்திறன் மற்றும் உற்பத்தித்திறனை மேம்படுத்துவதற்கானவழிகாட்டுதலை அவர்கள் வழங்கினர்.
மேலும், அவர்கள் படையினரின் தங்குமிட வசதிகளை ஆய்வு செய்ததுடன், பணியாளர்களுக்கு உயர் வாழ்கை தரத்தை வழங்குவதற்காக ஒரு புதிய தங்குமிட விடுதியை நிர்மாணிப்பதற்கான அறிவுத்தல்களை வழங்கினர்.
சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்த விஜயத்தில் பங்கேற்றனர்.