23rd January 2025 14:06:53 Hours
கெமுனு ஹேவா படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி கலாநிதி.(திருமதி) தில்ருக்ஷி விமலரத்ன அவர்களின் தலைமையில், கெமுனு ஹேவா படையணி சேவை வனிதையர் பிரிவினால் 2025 ஜனவரி 19, அன்று பாடசாலை பொருட்கள் நன்கொடை திட்டத்தை வெற்றிகரமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கெமுனு ஹேவா படையணி படைத்தளபதி மேஜர் ஜெனரல் டப்ளியூ.பி.ஜே.கே விமலரத்ன ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ அவர்களின் மேற்பார்வையின் கீழ் கெமுனு ஹேவா படையணி தலைமையகத்தில் இந் நிகழ்வு நடாத்தப்பட்டது.
இந்த நலன்புரி திட்டம், கெமுனு ஹேவா படையணி குடும்பத்தின் பிள்ளைகளின் கல்வியை ஆதரிப்பதை நோக்கமாகக் கொண்டது. இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக, நான்கு மில்லியன் ரூபாய் மதிப்புள்ள மொத்தம் 2,350 பாடசாலை உபகரண பொதிகள் விநியோகிக்கப்பட்டன. இந்த நிகழ்வின் போது, அனைத்து பயனாளிகளுக்கும் வழங்கப்படுவதை அடையாளப்படுத்தும் வகையில், படையினரின் 74 பாடசாலை பிள்ளைகளுக்கு அடையாளமாக அத்தியாவசிய பாடசாலை பொருட்கள் வழங்கப்பட்டன.
நன்கொடை நிகழ்வினை தொடர்ந்து, பங்கேற்பாளர்கள் போர் வீரர்களின் நினைவதூபியில் வீரமரணம் அடைந்த போர் வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தியதுடன் மேலும், படையணி தலைமையகத்தில் உள்ள அருங்காட்சியகத்தையும் பார்வையிட்டனர். 250 பங்கேற்பாளர்களுக்கு வழங்கப்பட்ட சிற்றுண்டி மற்றும் மதிய உணவோடு அன்றைய நடவடிக்கைகள் நிறைவடைந்தன.
இந்நிகழ்வில் கலாநிதி.(திருமதி) தில்ருக்ஷி விமலரத்ன, மேஜர் ஜெனரல் டப்ளியூ.பி.ஜே.கே விமலரத்ன ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ, நிலைய தளபதி, கெமுனு ஹேவா படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் பங்குபற்றினர்.