11th February 2025 17:23:22 Hours
இலங்கை இலேசாயுத காலாட் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி தர்ஷனி யஹாம்பத் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், வாழை வளர்ப்பை ஊக்குவிப்பதன் மூலம் படையினர் மற்றும் அவர்களது குடும்பத்தினரிடையே சுயதொழிலை ஊக்குவிக்கும் வகையில் 2025 ஜனவரி 30 அன்று இலங்கை இலேசாயுத காலாட் படையணி தலைமையகத்தில் ஊக்குவிப்பு நிகழ்ச்சி நடாத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியின் போது, படையணி படையினரிடையே வாழை கன்றுகள் விநியோகிக்கப்பட்டன. இந்த முயற்சி ஹோமகம தாவர வைரஸ் அடையாள நிலையத்தினால் மேற்கொள்ளப்பட்டது.
இந்த நிகழ்வில் கெமுனு ஹேவா படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பங்கேற்றனர்.