Header Block Tamil

இராணுவ சேவை வனிதையர் பிரிவு

11th February 2025 21:31:47 Hours

கெமுனு ஹேவா படையணி சேவை வனிதையரின் நன்கொடை திட்டம்

கெமுனு ஹேவா படையணி சேவை வனிதையர் பிரிவு 2025 பெப்ரவரி 8ம் திகதி படையணி தலைமையகத்தில் பல நன்கொடை திட்டங்களை நடாத்தியது.

கெமுனு ஹேவா படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி கலாநிதி (திருமதி) தில்ருக்ஷி விமலரத்ன அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் இந்த முயற்சி நடைபெற்றேது.

பிரவுன்ஸ் விவசாய (தனியார்) நிறுவனத்தின் செயல்பாட்டு முகாமையாளர் திரு. சமிந்த சேனாரத்ன, போரில் காயமடைந்த வீரர்களின் பயன்பாட்டிற்காக இரண்டு சக்கர நாற்காலிகளை நன்கொடையாக வழங்கினார்.

பின்னர், கெமுனு ஹேவா படையணி சேவை வனிதையர் பிரிவினால் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் தேர்ச்சி பெற்ற பிள்ளைகளுக்கு 85 கற்றல் உபகரண பொதிகள் நன்கொடையாக வழங்கப்பட்டன.

சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், கெமுனு ஹேவா படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள், சிப்பாய்கள் மற்றும் அவர்களின் பிள்ளைகள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.