07th February 2025 16:06:45 Hours
இலங்கை இராணுவ பொலிஸ் படையணியின் சார்ஜன் எச்எம்ஐஎல் அபேசிங்க அவர்களுக்கு ஒரு நெபுலைசர் இயந்திரம் 2025 பெப்ரவரி 06 ஆம் திகதி அனுராதபுரத்தில் வழங்கப்பட்டது.
இந்த நன்கொடை, இலங்கை இராணுவ பொலிஸ் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி இரேஷா பெரேரா அவர்களின் வேண்டுகோளின் பேரில், இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி சுவேந்திரினி திசாநாயக்க வழிகாட்டுதலின் கீழ், அவரது ஏழு வயது மகளின் சுகயீனத்தை சரிசெய்வதற்காக வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் கலந்து கொண்டார்.