Header Block Tamil

இராணுவ சேவை வனிதையர் பிரிவு

07th February 2025 09:25:44 Hours

4 வது இலங்கை இராணுவ சேவைப் படையணி படையினரால் பொலன்னறுவை மருத்துவமனை இரத்த வங்கிக்கு இரத்த தானம்

4 வது இலங்கை இராணுவ சேவைப் படையணியின் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் உட்பட 60க்கும் மேற்பட்ட இராணுவ வீரர்கள், 2025 ஜனவரி 30 அன்று பொலன்னறுவை போதனா மருத்துவமனையின் இரத்த வங்கிக்கு இரத்த தானம் செய்தனர்.

இந்த திட்டம் பொலன்னறுவை போதனா மருத்துவமனையின் மருத்துவக் குழுவால் நடாத்தப்பட்டதுடன், 4 வது இலங்கை இராணுவ சேவைப் படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் எச்பிஎம்டபிள்யூஎஸ்ஏபி மஹாகெதர எல்எஸ்சீ மற்றும் திருமதி சஞ்சலா மஹாகெதர ஆகியோரின் வழிகாட்டுதலுடன் மேற்கொள்ளப்பட்டது. இந்த முயற்சியை இலங்கை இராணுவ சேவைப் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி சாந்தி ராஜபக்ஷ அவர்கள் ஒருங்கிணைத்தார்.