Header Block Tamil

இராணுவ சேவை வனிதையர் பிரிவு

07th February 2025 09:22:17 Hours

4 வது இலங்கை இராணுவ சேவைப் படையணியின் சிவில் ஊழியருக்கு கட்டப்பட்ட புதிய வீடு கையளிப்பு

இலங்கை இராணுவ சேவைப் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி சாந்தி ராஜபக்ஷ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், கட்டப்பட்ட புதிய வீடு 2025 ஜனவரி 30 ஆம் திகதி 4 வது இலங்கை இராணுவ சேவைப் படையணியின் சிவில் ஊழியருக்கு அதிகாரப்பூர்வமாக கையளிக்கப்பட்டது.

4 வது இலங்கை இராணுவ சேவைப் படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் எச்பிஎம்டபிள்யூஎஸ்ஏபி மஹாகெதர எல்எஸ்சீ அவர்களின் மேற்பார்வையின் கீழ் 4 வது இலங்கை இராணுவ சேவைப் படையணி மற்றும் 3 வது பொறியியல் சேவைகள் படையணி படையினரால் இந்த கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இலங்கை இராணுவ சேவைப் படையணி சேவை வனிதையர் பிரிவின் திரு. நிர்மலா ஜயரத்ன மற்றும் திருமதி. பிரியங்கா அமரசிறி ஆகியோரால் வழங்கப்பட்ட நிதி மற்றும் பொருள் உதவி மூலம் இத்திட்டம் வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டது.