Header Block Tamil

இராணுவ சேவை வனிதையர் பிரிவு

06th February 2025 10:08:44 Hours

இலங்கை இராணுவ பொது சேவைப் படையணி சேவை வனிதையரால் சிவில் ஊழியருக்கான புதிய வீடு திறப்பு

இலங்கை இராணுவ பொது சேவைப் படையணி சேவை வனிதையர் பிரிவினரால் இலங்கை இராணுவ பொது சேவைப் படையணியின் சிவில் ஊழியரான திரு. ஹசித் உதானவின் பகுதியளவு கட்டப்பட்ட வீட்டை நிறைவு செய்து, 2025 ஜனவரி 31 அன்று அதிகாரப்பூர்வமாக அதனை கையளித்தனர்.

இந்த நிகழ்வில் இலங்கை இராணுவ பொது சேவைப் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி துஷாரி அபேசிங்க பிரதம அதிதியாக கலந்து கொண்டார். இலங்கை இராணுவ பொது சேவைப் படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.