Header Block Tamil

இராணுவ சேவை வனிதையர் பிரிவு

04th February 2025 15:15:32 Hours

இலங்கை இராணுவ மகளிர் படையணி சேவை வனிதையர் பிரிவின் புதிய தலைவி பதவியேற்பு

இலங்கை இராணுவ மகளிர் படையணி சேவை வனிதையர் பிரிவின் புதிய தலைவியாக திருமதி சசிதா ஹேவகே அவர்கள் 31 ஜனவரி 2025 அன்று இலங்கை இராணுவ மகளிர் படையணி தலைமையகத்தில் கடமைகளைப் பொறுப்பேற்றார்.

வருகை தந்த அவரை இலங்கை இராணுவ மகளிர் படையணி சேவை வனிதையர் பிரிவின் பிரதி தலைவி திருமதி ஷாஷிகா கருணாரத்ன அவர்கள் மரியதையுடன் வரவேற்றார்.

மத அனுஷ்டானங்களை தொடர்ந்து அவர் தனது கடமைகளை ஏற்றுக்கொண்டதைக் குறிக்கும் வகையில் உத்தியோகபூர்வ ஆவணத்தில் கையெழுத்திட்டார்.

இந்நிகழ்வில் இலங்கை இராணுவ மகளிர் படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள், சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் அதிகாரிகள் புதிய தலைவிக்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.