03rd February 2025 16:24:36 Hours
இயந்திரவியல் காலாட் படையணி சேவை வனிதையர் தலைவி திருமதி நிலந்தி வனசிங்க அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் இயந்திரவியல் காலாட் படையணி சேவை வனிதையர் பிரிவு உறுப்பினர்கள் 2025 பெப்ரவரி 2 ம் திகதி அனுராதபுரத்தில் உள்ள ‘அபிமன்சல I’ நலவிடுதிக்கு விஜயம் செய்தனர்.
இவ் விஜயத்தின் போது, அங்கு வசிக்கும் போர்வீரர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டதுடன் தேநீர் விருந்துபசாரத்துடன் நிகழ்வு நிறைவைடைந்தது.
21 வது காலாட் படைப்பிரிவின் தளபதியும் இயந்திரவியல் காலாட் படையணி படைத்தளபதியுமான மேஜர் ஜெனரல் டப்ளியூ.எம்.எஸ்.சி.கே வனசிங்க ஆர்எஸ்பீ யூஎஸ்பீ, சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இவ் விஜயத்தில் பங்குபற்றினர்.