Header Block Tamil

இராணுவ சேவை வனிதையர் பிரிவு

03rd February 2025 16:28:12 Hours

இயந்திரவியல் காலாட் படையணி சேவை வனிதையர் பிரிவு மற்றும் 2 வது இயந்திரவியல் காலாட் படையணி இணைந்து புதிய வீடு திறப்பு

21 வது காலாட் படைப்பிரிவின் தளபதியும் இயந்திரவியல் காலாட் படையணி படைத்தளபதியுமான மேஜர் ஜெனரல் டப்ளியூ.எம்.எஸ்.சி.கே வனசிங்க ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்களும், இயந்திரவியல் காலாட் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி. நிலந்தி வனசிங்க அவர்களும் இணைந்து கண்டியில் அதிகாரவணையற்ற அதிகாரிக்கு புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வீட்டினை 2025 ஜனவரி 31 ஆம் திகதி வழங்கினர்.

இத்திட்டத்திற்கு 2 வது இயந்திரவியல் காலாட் படையணி கட்டளை அதிகாரி லெப்டினன் கேணல் பீ.வீ.ஆர்.வீ குமார ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்களின் மேற்பார்வையின் கீழ் இயந்திரவியல் காலாட் படையணி சேவை வனிதையர் பிரிவு மற்றும் 2 வது இயந்திரவியல் காலாட் படையணி நிதியுதவி அளித்தது. மேலும், இயந்திரவியல் காலாட் படையணி சேவை வனிதையர் பிரிவினால் பயனாளியின் குடும்பத்திற்கு ரூ. 10,000 மதிப்புள்ள மின் சாதனம் நன்கொடையாக வழங்கப்பட்டது.

இந் நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பங்குபற்றினர்.